Monday, January 30, 2012

தெரியாத நிலையில்




















சொர்க்கமோ நரகமோ
        மரணத்தை அடுத்து
        இரண்டில் ஒன்றை
        தரக்கூடிய ஒன்று
        காதல்...

மரணம்
       உயிர் உன்னோடு
       முறிவதால்
காதல்
       உயிரானவள் உன்னோடு
       இருப்பதால்

மரணமும் காதலும்
       இன்னொன்றிலும்
       ஒன்றிப் போகும்
       கிடைத்தது
       வரமா சாபமா
       எனத் தெரியாத நிலையில் 

Thursday, January 26, 2012

தலைவிதியில் ஒரு வரி

உன் தலைவிதியில்
     ஒரு வரி காதல்
    
      அதை எழுதும்
      உரிமை மட்டும்
      உனக்கு.

Wednesday, January 25, 2012

கணக்கு

நீ அறியாமல்
    உன் வாழ்வில்
    ஏதேதோ நிகழ்ந்தேரும்
    வேளைதான்
    நீ உண்மையில்
    தோற்கிறாய்; மரணிக்கிறாய்

உயிர்  நீத்து
    உடல் வீழ்வதெல்லாம்
    வெறும் கணக்கு
    முடித்தலே...

Tuesday, January 24, 2012

உயரும் அடி


























பாரதியும் பாவேந்தர்களும்
     விரும்பிய பெண்ணுயர்வு
     இது தானோ?

கனுக்கால் தொடும்
     கூந்தல்கள் காணாமல்
     போனதாலே...
     எஞ்சி நிற்கும் கூந்தலை
     எக்கி எட்டும் முயற்சியோ?

எட்டாத தூரத்தில்
    நிற்கும் மரணத்தை
    விரைவாய் தொட்டுப்
    பார்க்கும் ஆசையோ?


இந்த ஒய்யார
    முக்காலியில் உட்காரயில்தான்
    உங்கள் பாதக் குழந்தைகள்
    ஓய்வை இழக்கும்....
    எலும்புகள் சோர்ந்து போகும்
இந்த உயரத்திலிருந்து
    விழாமலே
    உங்கள் பட்டு எலும்புகள்
    நொறுங்கிப் போகும்...

அழகே  ஆகினும்
    அளவாய் வேண்டும்
    வாழ்வும் வளமாய்
    நீளும்


Monday, January 23, 2012

மாற்ற(றுவோ)ம்















முதலாளி முதலைகள்
     வரி எய்த்த பணமெல்லாம்
     அவன் மகன் cafe dayஇல்
     150 காபியாய் நா நனைக்குது

சினிமா டிக்கட்
     நீள் வரிசையிலும்
ரசிகனாய்
     தலைவன் வரும்வழியிலும்
பக்தனாய்
     தெய்வ ரதவுலா வீதியிலும்
     கால் கடுக்க நிற்க
     யோசிக்காத கூட்டம்
     சாலை சந்திப்பில், சிக்னலுக்கு
     நிக்க யோசிக்குது ஏனோ?

அங்கே  இரண்டு
    மாநிலம் சண்டையில்
    இவன் இதோ வீணாக்கும்
    இந்த ஒரு குவளை நீருக்காக

பசிக்கும் வயிறுகள்
    அங்கே காய்ந்து கிடக்க, அதற்காய்
    விழும் பருக்கைகளை விட
    ருசி பார்த்து
    குப்பைத் தொட்டிகளுக்கு
    விசி எறியப்படும்
    கவளங்கள் தான் அதிகம்

ஆழறிவைத் தேட வேண்டிய
    கல்வி இன்று
    வேலை பெற்றுத்
    தரும் ஒரு மனுவாகிப் போனது

உழைக்க வேண்டிய
    மக்களின்  தொண்டன்
    தலைவனாகிப் போனான்...
   அவன் கட்சியிலயே மக்கள்
   அவனுக்குத் தொண்டனாய்
   உழைத்து ஓடாகிப் போனான்...


இதையெல்லாம் தட்டிக்கேட்கவேண்டிய
   என் வீரத் தனம்
   கோழையாய் முடங்கிப் போகுது
   இதோ கவிதைகளில்
 
நம் தலைவிதியை
   எழுதிய இறைவன்
   மாற்றிக் கொள்ள
   ஒன்றல்ல
   10 பேனா கொடுத்துள்ளான்
   விரல்களாய்...

மாற்றம் எங்களுக்கு
   ஆட்சிகளில் வேண்டாம்
   வெறும் கட்சிப் பெயர்களில்
    மட்டுமே இருக்கும்
    மறுமலர்ச்சியிலும் வேண்டும்
   

Friday, January 20, 2012

எழிலாள்


























அழகு
    இந்த ஒற்றை வார்த்தைக்கு
    அகராதியும் கற்காத
    அர்த்தம் நீ...

அழகாய் உன்னை
    எனக்கு கொடுத்து விட்டு
    வெறும் இரண்டு கண் கொடுத்த
    பிரம்மன் கஞ்சனடி

நீ எதிரே வந்தால்
    உலக மொழி அத்தனையும் 
    நான் கற்று இருந்தாலும்
    வார்த்தை பஞ்சமடி

திங்கள் ஒன்றாம் தேதி
    சம்பளம் வரவானதை
    சொல்லும் குறுஞ்செய்தியைவிட
    உன் தவறிய அழைப்பே
    அளவில்லா மகிழ்வைத் தருது

நாம் காதல்
    பேசத் துவங்கியா
    நாள் தொட்டு
    என் கைபேசியில்
    கைரேகைவிட
    முத்தமிட்ட இதழ்ரேகை அதிகம்

தெய்வம்
      தாய் வடிவில் மட்டுமல்ல
      என்னவளே! உன் வடிவிலும் வரும்
அன்னை  மடி சொர்க்கம் என்றால்
      உன்  மடியிலும்
      தூங்க ஒரு முறை அனுமதி
      நான் இரண்டாம் முறை
      உயிருடன் சுவர்க்கம்
      சென்று வருவேன்...

Thursday, January 19, 2012

காதலும் வெளிநாட்டு மாப்பிளையும் - 1



























மடங்காத தந்தையின்
    மீசையை போல்
    அடங்காது காதல் கொண்ட
    சில மகள்களின் பிடிவாதமும்
எப்படியோ! எளிதாய்
     படிந்து போகுது
    அப்பா தேடித் தரும்
    அமெரிக்க மாப்பிளையிடம்

குறையாத அப்பாவின்
    அந்தஸ்து அகங்காரம் போல்
    வற்றாது காதல் கொண்ட
    சில செல்விகளின் கண்ணீரும்...
சற்றென்று
     சிரிப்பாய் மாறுது
     "அவரு" வங்கிக் கொடுத்த
     ஆசை ஐபோனில்

இப்படி கால சந்தையில்
    செல்லாமல் போன
    பலக் காதல்களுக்காய்
எங்கிருந்தோ முளைத்து விடுகிறான்
    ஒரு அமெரிக்க மாப்பிள்ளை...

பல அமெரிக்க  வாழ் மாப்பிளைகளே!
     உங்கள் மனைவி
     ஒருவனின் முன்னால் காதலி...
     உங்கள் மகனின் பெயர்கள்
     முன்பே நிர்ணயிக்கப் பட்டுவிட்டது...


பி.கு. -
இது சிலர் செய்யும் தவறுகளைத்தான் குறிக்கிறது
யாரையும் காயப்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டதல்ல
தவறுகளை  மன்னிக்கவும்

Tuesday, January 17, 2012

மு(கா)தல் பரிசு

என்னை காதலிக்காதவள்
    என்னிடம்
    ஒரு காதல்
     பரிசு கேட்கிறாள்

அவளை
      மறந்து விடவேண்டுமென்பதது

 இருதயத் துடிப்பை
      நிறுத்திய பின்பு
      என் சுவாசத்தின்
       பொருளென்ன?
 உன்னை மறந்த பின்பு
       நான் வாழ்வதின்
       தேவை என்ன?


வரன் வருகை

அப்பா கொடுத்த
     தாளே ஆகினும்
     15 இடங்கள்
     ஆராய்சசியில் தான்
      தெரியும் கள்ளநோட்டு...


ஒரே நாள்
       ஒரு வார்த்தைகூட
        பேசாத தேநீர்சந்திப்பு
 மகளுக்கு நல்ல வரன்
        கிடைத்து விடுவதாய்
        உறவுகள் மகிழ்வது
எப்படி?

என் அறிவின் வியாபாரத்தில்
        பலரது எதிர்ப்பை சம்பாதித்து
        தந்த என் சந்தேக முதலீடு இது...

Sunday, January 15, 2012

பொங்கல் இனிக்குமா?





















பெருகிப் போன
        ஜன நெரிசலால்
        விலை நிலமெல்லாம்
        வீடாச்சு.
         பசுமையான விவசாயத்த
         தொலச்சாச்சு...

உருவாக்கிய இயந்திரத்து
         புகையால கழிவால
         மண்ணும் நீரும்
          நஞ்சாச்சு...

உயிர்கூறு ஆராய்ந்து
          ரகம் ரகமா
          வித கொடுத்தான்
          விஞ்ஞானி...
           ரசாயன உரத்தால
           வீடு செர்ந்துடுச்சு
           குறைஞ்ச காலத்துல
           விளைச்சலும்....

ஏழை விவசாயிக்கு
           எதோ புண்ணியத்துல
           இந்த வருஷம்
           பொங்கல் இனிப்பாத்தான்
பொங்கிருச்சு...

ஆனா அடுத்த வருடம்?
          அம்மிக் கல்லையே
          ஆட்டிப் புடும்
          ஆடிக் காத்து
          ஓடிப்போச்சு

           அணைக்கட்டுகளின்
            மதிலுடைக்கும்
            அப்பிகை மழ
            கண்மாய் கரைகளிடம்
            தோத்துப்போச்சு

            கரைகொள்ளா நீரோடிய
            ஆத்துக்குள்ள
            சக்கரா ரேகைகளோடுது
            மணலே வித்துப் போச்சு
            நீரு எங்க நிக்கும்?
       
            இயற்கையில் மாறாதது
            கிழக்காம உதிச்சு
            சூடு மாறாம
            நிக்குற சூரியன் தான்...
            காலம் மாறிப்போச்சு
            காணாம மாரிப்போச்சு
            பசுமை வறண்டு போச்சு        
            பசு மடியும் சுருங்கிப் போச்சு...
            அறிவியலுக்கு எட்டாத
            நோயக் கூட நொடியில் போக்கும்
            மூலிகை இருந்துச்சு
             மண்ணோடு மக்கிப் போச்சு
             மக்காத பலவிசயம்
             இங்க நிலச்சு போச்சு...
               

            தேன் சுரந்த
            மலர்கள் கொஞ்சம்
            நஞ்சை சுமக்குது.
            நதி ரேகையில்
            ஓடும் கொஞ்சூண்டு
            நீரில் கூட
            இரசாயனம் இருக்குது.
         
பாழாக்க ரொம்ப
            நாளாகல...
புதிதாக்க நேரம் இங்க
            ரொம்ப இல்ல...
அழிக்க யோசிக்கல
             ஆக்க இன்னும் என் யோசனையோ!
 
ஆறு மாதம் தாமதம
விளைச்சல் வீடு வந்தாலும்,
 வேகமா அது எல்லாம்
அழுகிப் போனாலும்,
விளைச்சல் கொஞ்சம்
குறவா இருந்தாலும்...
திரும்பத்திரும்ப விதகிடைக்க
இயற்கை  வித, இயற்கை உரம்
பயன்படுத்து...

நிச்சயமா  அடுத்த
உழவர்தினமும்
உனக்கு  இனிப்பாவே இருக்கும்...

தொழர்க்களே! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

பி.கு. - ஆங்கிலப் புத்தாண்டன்று "happy new year" சொல்லும் உதடுகளே! தமிழர் திருநாளன்று தமிழில் வாழ்த்துங்கள் "happy pongal" வேண்டாமே...


              





Thursday, January 12, 2012

ஆதாம் ஏவாள் குற்றம்
























காதல் ஒருவரம்
      உயிர்  போகும்
      தவம் வேண்டும் இதற்கு


தவமின்றி
      சிலருக்கு  இங்கே
      கிட்டிடையில் அருமை
       இழந்து போகுது வரம்

அர்த்தமில்லாத சண்டைகள்
        காரணம் கேட்டால்
        சண்டை இல்லை அது
        இலக்கியம் சொல்லும்
        ஊடல் இது என்கிறது
       முட்டாள் தனம்

தேவை இல்லா சந்தேகங்கள்
        சொன்னால்
        சந்தேகம் இல்லை அது
        காவியம் சொல்லும்
        தன்னுடமை காக்கும்
        காதல் பதற்றம் என்கிறது
        முட்டாள்தனம்

 பசியில் உலகம் போராடும்வேளையிலும்
        குப்பைத் தொட்டியில் வீணாகும் உணவு
        குறையாதது போல்

உண்மைக் காதல்கள் ஒருதலையில் நின்று இறக்கும் நிலையிலும்
         கிடைத்த காதலை
         இல்லாத காரணம் சொல்லி
         கொன்றுக் குவிக்குது
         உண்மைக் காதலே        

காதலோன்றும் பிறவிக் குருடல்ல
          காதலர்களால் குருடாக்கப்படுகிறது
       
காதல் சிவம் என்றால்
        குருடான சிவனுக்கு
        கண் கொடுக்க
        அறிவுக் கண்ணப்பன்
         என்று வருவான்!
          

வழி நெடுக்க
















"பழைய பஸ் ஸ்டாண்டுல
      இறங்கிட்டியா?

நேரா  இருக்குற
    தெருவுல நுழை

10 கட்டிடம் தள்ளி
   குப்பையா கிடக்குதா
   அதுக்கு பக்கத்துல
   போரா ரோட்டுல வா

சேறும் சகதியுமா
    இடப்பக்கமா ஒரு தெரு
    போகுதா?

அதுல 3வது
    மாடி  வீடுதான்
என் வீடு"

இப்படி தினம்
    நண்பனுக்கோ உறவுக்கோ
    வழி  சொல்லையிலோ
    காலையில்  அவசாரமாய்
    அலுவல்  செல்லையிலோ

நாட்டின் அவலங்களை
     பேசியும் கடந்தும்,
     உரைக்காத
     அளவு மக்கள்
     தப்போடு ஒற்றிப்
     போனதாலோ, என்னவோ?
     உழலுக்கு கைதாகி
     வெளி வருபவன்கூட
     சிரித்துக்  கொண்டே வருகிறான்
     கூசாமல் மந்திரி ஆகிறான்
     தேசம் நாசமாகும் கலிகாலம் இது


[பாமர  மொழிக்காய் வேற்று மொழி கலந்தேன். மன்னிக்கவும்]

Sunday, January 8, 2012

பெண்மை

புரியாத போதும்
சுவைக்கும் கவிதை
அவில்கின்ற போது
குழப்பும் புதிரிவள்

அன்னை,சகோதரி,
காதலி,மனைவி,
மகள்  ஆகா
எத்தனை பிறப்பு
யோகம் எனக்கு இவளாலே

பாசம்,காதல்,
நேசம், காமம், கண்ணீர்
எத்தனை உணர்வு இவளாலே

மாதராய் பிறக்க 
மாதவம் செய்தவளே!
உன்னை உறவாய் அடைய 
மாதவம் செய்தேன் நான்


Saturday, January 7, 2012

புத்தகக் கண்காட்சி

அவனவன்
தன் தன் மூளையை
பேனா என்னும் அலகியால்
நகலெடுத்து அடுக்கி 
நிறைத்தனர் அரங்கம் முழுக்க


என் ஒரு பணப்பையை
காலி செய்து அறிவுப்பை 
நிறைந்துகொண்டிருந்தது

நவீன உலகம்
வேகம்  அதிகம்
அன்னையையும் அப்பாவையும்
முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டு
வாரிசுக்கு கதை சொல்ல
சீடியில் சிமுலேடேட் தாத்தாவை 
வாடகைக்கு வாங்கும் கூட்டம்


காலம் அழிக்கும் மொழிகள்
கலைஞனுக்கு ரத்த தானம் கொடுத்து
எழுத்தாய் மறுபிறப்பெடுத்து
வாழும் குவியல்


தேன் சுரக்கும்பூவை
வண்டு  மொய்க்கும் இயல்பு
தமிழ் கடலில் மோதிய
அலை பார்க்கையில்
தமிழ் வாழும் என்று 
நம்பிக்கை வந்தது

ஒரு சில பதிப்பகங்ளில்
அறிவு முட்டாள்தனத்தில் 
கட்டிகொடுக்கப்பட்டது போல்
புத்தகம் விற்பனையானது பாலிதீன் பைகளில்


Friday, January 6, 2012

இசைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்


1966 தமிழக கரை வந்த
ஒருப் புயல் இன்றும்
லட்சோபக் கோடி
இதயங்களை நனைக்கிறது
இசை மழையால்

 தமிழ் மறந்த
நவீன மங்கைகளின்
வாரிசுகளைத் தாலாட்டும் 
இவன்  இசை

காதலியின் 
சுடு வார்த்தைபட்ட
இதய  காயங்களை
இறகுகளால் வருடும்
இவன் இசை
 
காதலைப்  பெற்ற
இதயத்தை
இமய உச்சம் ஏற்றும்
இவன் இசை
 
வாழ்வை  வெறுத்தவனை
வாழத் தூண்டும்
இவன் இசை
வாழ்வை வென்றவனை
மேலும் மெருகேற்றும்
இவன் இசை
 
உலகம் மெய்மறக்கும்
கண்ணனின் குழலிசையில்
அவனும் மெய்மறப்பான்
இவன் இசையில்
 
இவன் இசை கலையில்
கலியுக ராவணன்
ராவணனுக்கும் இவனுக்கும்
இரு வித்தியாசம்
ராவணன் அகந்தைக்காரன்
இவன் இல்லை
ராவணன் இசையால்
இமயத்தைதான் அசைத்தான்
இவன் உலகையே அசைத்தான்

இவனுக்கு விருதாகி
ஆஸ்கார் தன்னை 
கவுரவப் படுத்திக்கொண்டது

தாயின் பாசம் கசியும்
தாலாட்டை இருவரால் தான்
98 விழுக்காடு நிகர் செய்யமுடிந்தது
ஒன்று  இசைஞானி
மற்றொன்று இசைப்புயல்

இவன் இசைக்கு
மொழி மத தேச
எல்லை இல்லை
என்று உலகில்
அழுத்தி எல்லோர் 
இதயத்திலும் எழுதியவன்
 
இசையே
உனக்கு  பிறந்த நாள் வாழ்த்துக்கள்
[06 Jan 2012]


Thursday, January 5, 2012

முற்றச்சித்திரம்


நிலவும் துகளாகத் தயார்
அடுத்த பிறப்பு
உன் கைகளால் கோலமாகும்
மாவென்றால்

அழகி உந்தன்
ஆட்டோகிராபை
தன்  மார்பில்
வாங்கிக் கொள்ளுது பூமி

இன்றுதான் நானறிந்தேன்
பூமியிலும் வானவில்
தோன்றுமென்று அறிந்தேன்
உன்னாலே!

அழகே! அழகாய்
கோலம் போடுவதைக்
குறைத்துக்கொள்
அப்புறம் பொன் விலைக்கு
போட்டியை உன்முற்றத்து
மண் விலையும் ஏறிப்போகும்


எழிழே! உன் திறம்
இறைவன் அறிந்திருந்தால்
உன்னைத்தான் உலகம்
படைக்க கேட்டிருப்பான்

சுலபமாக சொர்க்கம்

ஏகாதசி இரவு
விழித்தால் போதுமாம்
பாவிக்கும் சொர்க்கமாம்

இப்படியே பாவிகள்
சேர்ந்தால்
சொர்க்கம் உண்மையில்
சொர்க்கமா?
இறைமை இவனது பாவத்தை
அவ்வளவு எளிதில் மன்னிக்குமா?

 

Wednesday, January 4, 2012

பொய் இல்லா மெய்


கடலில் வெறும்
தண்ணீர் மட்டும் 
குடித்துவிட்டு எழுதியவன்
கடல் வெறும் உப்பு
என்றுதானே எழுதுவான்.

அதை படித்துவிட்டு
உள்ளே இறங்க மறுத்தால்
முத்து கிடைப்பது எப்போது.

போலிகளையும்
கோழைகளையும் பார்த்தால்
மெய் காதல் தெரியாது.


ராசாயணம்  என்று தெரிந்தும்
அழகு  நிலையம் நிற்கவில்லை
மரணம்  என்று தெரிந்தும்
புகைப்பவர் குறைந்தபாடில்லை
ஒரு தந்தி துக்கம் தந்ததற்காக
மொத்த தந்தியும் நின்றுவிடவில்லை

பின் ஏன்
வருகின்றக் காதலை
தோற்றுப் போனக் 
காதலோடும்
போய் போலி கோழைக் 
காதலோடும் ஒப்பிட்டு 
கிடைக்கும் புதையல் 
தொலைக்கீரீர்

தேர்வுகள்
தோல்விகள் வழி
பாடம் சொல்லத்தான்
வீழாமல் நடந்த
குழந்தை உண்டா?

ஒரு உண்மைக் காதலை
வாழ வையுங்கள்
காதலென்றால் எது என்று
அது சொல்லும்!

முள்ளாகும் முல்லை


பாரதி முதல் புதுமைபித்தன் வரை
நதிநீர் இணைப்பை பாட
மடையன் நான் எழுதுகிறேன்
நதி நீருக்கு அடித்துக் கொள்ளும்
அண்ணன் தம்பி பற்றி

அன்னைமடிக்கு
அந்நியன் அணை கட்டிபோட
பாலுக்கு சண்டை போடும்
இரு பிள்ளைகள்
சேரமும் பாண்டியமும்

ஆழ்துளை  கான்கீரிட்
என்று பல நவீனமுறை 
கொண்டு கீறாத அணையை
பலபடுத்த போராடும் தேசமே!
இனி எந்தக் கான்கீரிட் போட்டு
ஒட்டப் போகிறீர்கள்
கீறிப்போன இரு சகோதர
மாநிலத்து நட்பை

அடக்க வந்தவனுக்கு
அகிம்சை சொன்ன நாடே!
சகோதரனுக்கு
ஏன் இந்த இம்சை செய்கிறாய்
தான் செஞ்சு
"இடுக்கி" போட்டு 
கழுத்தைநெரிக்கும் தப்புக்காக
அரசியல் சதுரங்கத்தில்
எதிராளியை மட்டுமல்ல
தன்  பக்கத்தையும்
முட்டாளக்குது ஒரு கூட்டம்

தம்பி தெரியாமல் தப்பு செஞ்சா
அண்ணன் பார்த்திருப்பதும் தப்பு
பொறுமை இழப்பதும் தப்பு

மூத்தவன் கடமை
அறியா தம்பிக்கு 
உண்மை அறியச் செய்வதே தவிர
அறிவிழந்து அடித்து நோறுக்குவதல்ல 

முல்லை பூ நதி
அவளை நட்புக்கு நடுவே
முள்வேலியாக்கிவிடாதீர்
புரிய  வைப்போம்
இருக்கும் அனைகொண்டே
நீரோடு அன்பையும்
பகிர்ந்துண்போம்

Monday, January 2, 2012

200 தான்

காதலை
அதிகம் பாதிப்பது
சாதியோ
மதமோ
பணமோ
அந்தஸ்தோ அல்ல

ஒரு நாளைக்கு
குறுஞ்செய்தி  வரம்பு
200 தான் என்னும்
கொடுரம் தான்

திருமதி/திரு குரல்


அரியர் சுவரைத்
தாண்ட முடியா
திறமைசாளிக்கும்
அறிய சந்தர்ப்பம் தரும்

குரலாலே சிரிக்கும்
வித்தை கற்றவர்கள்

அவர்கள் உச்சரிப்பது
வெறும் ஆங்கில மொழிதான்
வேறு மந்திரம் ஏதுமில்லை
இருந்து ஏனோ இருதயம்
எளிதாய் அவர்கள் வசப்படுது

கண்கள் பார்க்காமல்
அந்த தொலைபேசிக்காரி
அழகி என்று
அளந்து காட்டும் குரல்

அவளிடம் பேச,
வேண்டுமெனவே
நன்றாய் இருந்தவைகளிலெல்லாம்
குறைகள் தெரிந்தது

எல்லோர் காதுக்குள்ளும்
குரல் அமிழ்தம் ஊற்றுபவர்கள்.
கடவுளாலும் தீராத
பிரச்சனையே ஆகினும்
நொடியில் தீர்க்கலாம்
என்ற நம்பிக்கை தருபவர்கள்

பிறருக்காய்  குரல் கொடுக்கும்
ஜீவன் தனக்காய்
பேச வார்த்தை இன்றி
ஊமையாகிப் போனது

ஏனோ வாழ்க்கைத் தாகத்தால்
தவிக்கும்வாய்க்கும் நீர் மறந்தான்
லட்சியப்  பசிக்காய்
சரியான வேளையில் பசி மறந்தான்

நாகரிகம்  கெடுக்கும் கூட்டம்
என்று ஊரே இவனை வசை பாடும்
இவர்கள் நாகரிகத்தை
ஒரு சான் வயுறுக்கு
அடகு வைத்த கணக்கு
 எவன் அறிவான்

சிறைக்குள் இருக்கும்
கிளியிடம் தன் தலைஎழுத்தை
வாசிக்க சொல்லும் கூட்டம்போலே
ஒருசிலரின் இடைவேளிவிடா
அழைப்புகளின் அலைகளால்
இவர்கள் வாழ்க்கை 
ஓடமும் ஓடுது

அழுக்கு  ஜீன்சிலும்
அபாச்சே பைக்கிலும்
திரியும் அழகன் இவன்

பீசா சாப்பிட்டும்
பிச்சைக்காரன் இவன்

வங்கிகளுக்கு 
குரல்கொடுக்கும்
ஏழை இவன்

ஓயாத சென்னைகூட
உறங்கிப் போகும் நடுஜாமம்
பேய் அழுத்துப்போகும் நேரத்தில்
அலுவல் முடிந்து
வீடு திரும்பும் அப்பாவி இவன்

Sunday, January 1, 2012

தினமும் மலர்வாள்


போர்வை விளக்கி
பள்ளிஎழும் என்னவள்
அதிகாலையில்
உதித்திடும்  வெள்ளி நிலா

வேம்பும்  கசப்புத்
துறந்தது
அமிழ்தமிவள்
பல்  துலக்க
குச்சி ஓடித்ததும்

வறண்ட கிணறு
வள்ளலானது பூ இவள்
குளிக்க நீர் கேட்டதும்

 நீராலே கூடியது 
(ஆசைத்)தாகம்
அவள்  குளித்து வந்து
உதறிய கூந்தலால்
தூறிய சாரலில்

கோலம்  போடத்
தெரியாதென்றால்
வேண்டாமடி செல்லமே
பாதம் பதிய 
நடந்து வா 
போதும் என்றேன்

மாவை நெய்து
பூமி பேதைக்கு
வண்ண ஆடை நெய்தாளோ?
வாசல் கோலத்தில்

இரவிவர்மனின்
ஓவியம் ரசிக்காதவன்
அவளின் மூன்று புள்ளிக்
கோலம் ரசித்தேன்

சமஸ்கிருதமும்
சுவைக்கத்தான் செய்தது
அய்யராத்து அழகி அவளின்
மந்திர  உச்சாடனையில்

ஐயோ!
அவள் முத்தம்
இருக்கையில் ஏனோ
என் வீட்டில்
தேநீர் செலவே இல்லை

தொட்டுக்கொள்ள
அவள் அன்பு இருக்க
என் தோசைக்கு
சட்டினி அரைத்ததே இல்லை

அவள்  பார்வை
தீண்டும் நேரம்
சுவாசிக்க மறந்து போனேன்

அவள் விரல்
கோர்த்து நடக்க
தூரம் எல்லாம்
மறந்தேன்
நேரம் காலம்
கடந்தேன்

அவள் மடி
நான் சாய்ந்து
என் தலை
அவள் கோத
உயிருடன்  சொர்க்கம்
நான் போனேன்

அவள் கண்ணயர்ந்த
பின் எழுந்து
தூங்கும் அழகு ரசிப்பதில்
தூக்கம் நான் மறந்தேன்

அடியே! இந்த
ஒரு வாழ்க்கைகுத்தானே
அன்று உன் தந்தையின்
அரிவாள் எதிர்த்து நின்றேன்



குடைகம்பிச் சாரல்

காதலிக்கப்படாதவன்