Tuesday, July 27, 2010

போர் ?


ஆள் இல்லக் காடாம் ...
யாருக்கு சொந்தம்
என்று போராம் ...
இங்கு நாடே சுடுகாடானது
அந்தக் குருடர்களின் கண்களுக்குத்
தெரியுமா என்ன? ...

பிரிந்தது


உனை நினைத்து
எழுதிக் காலியாகும்
பேனா கூட நீ
பிரிந்த அழகை சொல்லி ...
என் நெஞ்சை கிள்ளிக் கொல்லுதடி ...

முற்று புள்ளி



அன்பே நீ சிரிப்பதைக்
கொஞ்சம் நிறுத்திக்
கொள் ... என் கவிதைகள்
முற்று புள்ளி கேட்கிறது ...

மென்மையோ?




மென் மலராக இருந்தாலும்
விழியில் விழுகையில்
உறுதித் துன்புறுத்தத்தான்
செய்யும் ...

Monday, July 26, 2010

வேண்டிய சாபம் வரமாக

காதல் என்னும் பாதை
பிரிவென்னும் ஊருக்குத்தான்
என்றால் அந்த பயணத்தில்
நான் வழிதவறவே ஆசைப்படுவேன் ...

சுகக்கின்ற வழியே


துகிலோடு சாயமாக
மென்மையான காதல் நான் கேட்க ...
எந்தன் இதயச் சதையோடு
கயமாகத் தான் உனை நான்
உணர்ந்தேன் ...

தொலைந்தவைகள்



என் பேனாவின் பாதங்கள்
முடமாகிப் போக ...
என் வாய்க் குழலின்
துளைகள் எல்லாம்
மர்மமாக தொலைந்ததடி ...

பயணங்கள்



எந்தன் வரிகளின் பயணங்கள்
காதலின் சோலை வழியா?
பிரிவின் பாலை வழியா?

Monday, July 12, 2010

மனிதம்

காதல் முதல் காமம் வரை
இந்த மனிதம் சுகக்கின்ற வலி...
அந்தக் காதல் கசக்கதவரை ...
அந்தக் காமம் திகட்டதவரை ...

குடைகம்பிச் சாரல்

காதலிக்கப்படாதவன்