Wednesday, March 31, 2010

நிலவே

உன் அருகே என் புவி ஈர்ப்பு
விசை தோற்று பொய் நான் மிதகையிலே
நீ நிலவென்று நான் ஒப்புகொள்கிறேன் ...

கோபங்கள்

உன் பிரிவின் செய்திகள்
கேட்ட பின்பு எழுந்த இந்நாள்
சூரியனை கோபிக்கிறேன் ...

Monday, March 29, 2010

எங்கே ?


இதுவரை அறுவைசிகிச்சைக்கு கூட
எந்தன் நெஞ்சம் திறந்ததில்லை ...
இருந்தும் என் இதயம் ஏனோ காணவில்லை
திருடிய உன்னை தெரிந்த போதும்
குற்றம் சொல்ல சொற்கள் இல்லை ...

வார்த்தைகள் இல்லையடி





பல்லவச் சிற்பிகளும்
குழம்பி போவான் உந்தன்
காலடிச் சுவடுகளின் அழகினிலே

நம்பிக்கை

என் வாழ்கையும் சதுரங்கம் தன்
நானும் சதுரங்க ராஜாதான்
நான் எண்ணிய திசையில்
எண்ணிலா கட்டங்கள் நகர்பவன்தான்
என்னை விழ்த்த ஒரு அசைவும் உண்டோ ...

கற்பனை




மழை துளி கலைத்த
உந்தன் நெற்றி திலகமும்
தூரிகை தீண்டாமல் உதித்த
சித்திரம் தானடி ...

முதல் பரிசு ?


கண்ணீர் துளியும் பிடித்ததடி
நீ தந்து போனதால் ...

சிந்தனை



சிறு துரும்பும் பல் குத்த உதவும்
ஆனால் இது குத்தும் என்பதால்
உதவாதது ... உடைந்த கண்ணாடி

Saturday, March 27, 2010

கோபம் ...



வள்ளுவன் வாக்கினில் கோபங்கள் அழகற்றவை
அதையும் அழகக்கிறாய் நீ கோபப்பட்டு

பார்த்ததும் ...

கார் முகில் போர்த்திய வெண்மதியே...

மணியோசைக்கு அதிரும் கோபுர புறாவை
அதிர்ந்து அதிருந்து அமரும் பூ விழியே ...

பன்னீர் பூவாய் வெட்க நகையோடு
நிலன் நோகும் பூமுகமே ...

பூமி நோகா சுவடு தெரியா
நடையிடும் பட்டு பாதம் ...

உயிர் தனியாய் நடந்து போக
உடல் அதை வேடிக்கை பார்ப்பது போல்
உறைந்து போகிறேன் ...

உந்தன் பாதைகளில்
நீ விதைத்து போனது சுவடுகள் மட்டும் அல்ல
என் உயிர் முடிச்சுகளும் தான் ...

ஈழம்


இவர்கள் வெட்டபடுவதேர்கென்றே
கட்டப்பட்ட சதுரங்க காய்கள்

சுகம் - சுமை

உன் பதச்சுவடுகளும்
நானும் ஓரினம்
உன்னை பிரிந்ததில் பூமிக்கு
சுமையானோம்

அழகுப் பார்வை

சிதைந்த சிற்பமும்
அழகென்று கண்டேன்
கணபதியின் தந்தத்தில்
அழகுப் பார்வை

தருணம்

உன் தோழிகள் என்னை கடக்கையிலே
உன் உடை போல் எங்கும் பார்க்கையிலே
நீ இல்லத் தருணம் வலிக்கிறதே...

குடைகம்பிச் சாரல்

காதலிக்கப்படாதவன்